கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தற்போதைய நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயரூவான் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை மண்ணின் நிலைமை மற்றும் கொரோனா வைரஸின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப காரணங்களை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தார் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில் அதனை மாற்றுவதற்கான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை அனைவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் இலங்கையை பாரிய பேரிடரைத் தவிர்க்க முடியும்.
கொரோனா வைரஸ் அச்சத்தால் நாட்டில் பல தற்கொலைகள் இடம்பெறுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கொரோனா தொடர்பில் அச்சப்படத்தேவையில்லை எனத் தெரிவித்தார்.