கொலைக்கு உதவிய இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது!

0
138

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான 21 கிராம் 121 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி களனி, பட்டிய ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் வெல்லம்பிட்டிய மற்றும் மோதர உயன கொழும்பு 15 பிரதேசங்களைச் சேர்ந்த 37 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், இரண்டு பெண்களும் மோதர உயன கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக பெஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.