தங்காலை-விதாரந்தெனிய பிரதேசத்தில் கடந்த 16ஆம் திகதி இரவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென சந்தேகிக்கப்படுவருக்கு சொந்தமான நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் மற்றும் சந்தேகநபரான பெண்ணொருவரின் வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு அருகிலேயே இவ்வாறு தீ வைக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் வீடு அமைந்துள்ளiதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.