நாட்டில் நேற்று பதிவான 443 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி பொரளையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியிலிருந்து 138 பேரும், கொழும்பு வடக்கிலிருந்து 21 பேரும், கொழும்பு துறைமுகத்திலிருந்து 11 பேரும், 42 பேர் கொழும்பின் வேறு பல இடங்களிலிருந்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து 62 பேரும், களுத்தறையிலிருந்து 20 பேரும், இரத்தினபுரியிலிருந்து 09 பேரும், நுவரெலியாவிலிருந்து 06 பேரும், கண்டி மற்றும் மாத்தறையிலிருந்து தலா மூவரும், காலி மற்றும் குருநாகலிருந்து தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களுள் அடங்குவர்.
அதுமாத்திரமன்றி தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 25 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 5 ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.இதேவேளை நேற்று மாத்திரம் 94 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் ஆவர்.
தற்போது நாடு முழுவதும் 12 ஆயிரத்து 187 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5,858 ஆக பதிவாகியுள்ளது.
இரு வெளிநாட்டினர் உட்பட 6,305 பேர் நாடு முழுவதுமுள்ள 48 மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 400 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.