கொழும்பை சுற்றியுள்ள சில பிரதான வீதிகள் இன்றும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, அத தெரணவுக்கு தெரிவித்தார்.
இதன்படி, பௌத்தாலோக மாவத்தை மலலசேகர சந்தியில் இருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையும், விஜேராம வீதி கிரிகோரி வீதி சந்தியிலிருந்து பௌத்தாலோக வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியிலிருந்து ரொட்டுண்டா சந்தி வரையும், பிரே புரூக் பகுதியும் இவ்வாறு மூடப்படவுள்ளன.
மேலும், வெசாக் வலயங்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு அந்த வலயங்களுக்கு நடந்து செல்ல முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனிடையே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார், கோரியுள்ளனர்.