கொழும்பில் விருந்து ஒன்றில் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் மரணம்

0
182

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுமார் 25 வயதுடைய இளைஞனே பலியானதாகவும் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) துறைமுக நகர வளாகத்தில் குழு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (18) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.