கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தொகை என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது, 05 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 76,500 ரூபா பணத்தொகை என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்………..