கொழும்பு – கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவை இன்று சனிக்கிழமை (19) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்லோயா – ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 3.30 மணியளவில் யானைகள் கூட்டம் ஒன்று எரிபொருள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, ரயிலானது தடம் புரண்டதோடு, விபத்தில் சிக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன. இதனையடுத்து, மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தடம் புரண்ட ரயில் சீர் செய்யப்பட்டதையடுத்து தற்போது மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.