இலங்கையின் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (05) காலை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமையவே முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அரகலய’ ஆர்பாட்டத்தை தொடர்ந்து காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக ஐந்து தலைமை ஆய்வாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை விசாரிக்க நீதிமன்றினால் குறித்த அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் சம்பவங்களை முன்வைத்ததையடுத்து, காவல்துறைமா அதிபரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.