கொழும்பு – இராஜகிரிய பிரதேசத்தில் வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய, மத்திய வெலிக்கடை சந்தியில் இருந்து மாதின்னாகொடை சந்தி வரையான வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் பெருத்தும் நடவடிக்கை காரணமாக இவ்வாறு வீதி மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் இராஜகிரிய மத்திய வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் மாதின்னாகொடை சந்தி ஆகிய வீதிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.