25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொவிட் பரிசோதனைகளை அதிகரித்தால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரலாம் – சுகாதார அமைச்சின் அதிகாரி

தென்கிழக்காசியாவில் கொவிட் அதிகரிக்கின்ற நிலையில் இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே கொவிட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள்  தடுப்பூசி செலுத்தும் பெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதால் அச்சப்படவேண்டிய தேவையில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவைரஸால் எவரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ள சமித்தே கினிகே  எவரும் பாதிக்கப்படலாம்  எனினும் தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.

பெருமளவு மக்களிற்கு நாங்கள் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதால் பெரும் பாதிப்புகள் எற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்டினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக தற்போது முன்னெடுக்கப்படும் சோதனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே

காய்ச்சல் சளியால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாங்கள் சோதிப்பதில்லை அவரை கொவிட்பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டுமா என்பதை மருத்துவ அதிகாரியே தீர்மானிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கைகளை அதிகரித்தால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரலாம் என தெரிவித்துள்ள அவர் எனினும் தடுப்பூசி காரணமாக பொதுமக்களின் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது இதனால் சோதனைகளை அதிகரிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles