கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்தில், தற்காலிகமாக தங்கியிருப்பார்- தாய்லாந்துப் பிரதமர்!

0
191

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை, தாய்லாந்தில், தற்காலிகமாக தங்கியிருப்பார் என, தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், தற்காலிக விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அரசியல் செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டேன் என உறுதியளித்துள்ளதாகவும், தாய்லாந்துப் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், ‘இது ஒரு மனிதாபிமான பிரச்சினை எனவும், தாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு உறுதியளித்ததாகவும், அரசியல் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்ட தாய்லாந்துப் பிரதமர், இது அவருக்கு, புகலிடம் தேட, ஒரு நாட்டைக் கண்டுபிடிக்க உதவும் என தெரிவித்தார்.