28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோழி இறைச்சி – முட்டையின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இத்தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் நாற்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சில சமயங்களில் முட்டையின் விலை 70 ரூபாய் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என சங்கம் கூறுகிறது.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதியில், 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விலங்கு தீவுனங்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கோழிப் பண்ணையாளர்கள், தீவனங்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை உயர்வடைந்துள்ளமைக்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறான நிலையில், இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர், விலங்கு தீவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles