க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு தடை !

0
75
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அனைத்து கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 29 நள்ளிரவுடன் அல்லது அதற்கு முன்னதாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.க.பொ.த உயர்தர பரீட்சை-2023 நாடு முழுவதும் 2024 ஜனவரி 4 முதல் 31 வரை 2,298 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது , டிசம்பர் 29ஆம் திகதிக்குப் பிறகு வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது என்றும் பரீட்சை நடைபெறும் மையங்களில் 2,300 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 12,000 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுபரீட்சை மையங்களில் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் பரீட்சை எழுத தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் போது மோசடி மற்றும் முறைகேடுகளை செய்பவர்களுக்கும் பரீட்சைகள் திணைக்கள சட்டங்களின் பிரகாரம் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.