க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்: மட்டு-அம்பாறையில் சிறப்பான ஏற்பாடுகள்

0
253

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்தும் 15ஆயிரத்து 900 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.


மட்டக்களப்பில் 14 பரீட்சை ஒருங்கினைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 119 பரீட்சை மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்று மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.

அம்பாறை மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன், பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை அவதானிக்க
முடிந்தது.


பரீட்சைக்குள் செல்வதற்கு முன்னர் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றும், சமய வழிபாடுகளிலும் பரீட்சார்த்திகள் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் ஆவலோடு பரீட்சை நிலையத்திற்குச் சென்றனர்.