சஜித்திற்கு 75 இலட்சம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் – ஹர்ஷண ராஜகருணா

0
65

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதென்பது மொட்டுக்கட்சியினருக்கு வாக்களிப்பதற்கு சமமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதென்பது மொட்டுக்கட்சியினருக்கு வாக்களிப்பதற்கு சமமாகும். மொட்டுக்கட்சினரே ஜனாதிபத ரணில் விக்கிரமசிங்களை கொண்டு இயக்குகின்றனர். அவர்களை விடுத்து வேறு எவரும் அவருடன் இல்லை.அதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கட்சியினரை பாதுகாத்துக்கொண்டுள்ளார். அதேபோன்று மொட்டுக்கடச்pயின் தலைவர்களை பாதுகாக்கின்றார்.

இத்தகைய பின்னணியில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களை பார்க்கிலும் அதிக பெரும்பாண்மை வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார்.
அவர்கள் 69 இலட்சம் மக்களின் பெரும்பாண்மை வாக்குகளை பெற்றுக்கொண்டனர். ஆனால் நாம் 75 -80 இலட்சம் பெரும்பாண்மை வாக்குகளை சஜித் பிரேமதாச நிச்சயம் பெற்றுக்கொள்வார்.