சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 6 பேருக்கு விளக்கமறியல்.

0
139

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்கலாக 6 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். இதன் போது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட குறித்த 6 பேரையும் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று தலைமன்னார் போலிசாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். ஏனைய 18 வயதிற்கு குறைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.