மன்னார் சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடமேற்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது நடவடிக்கைகளின் போது 04 படகுகள் மற்றும் சுமார் ஆயிரத்து 670 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட 12 பேர் உட்பட கடலட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.