25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு விசேட வாகனங்கள்

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார்.

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 விசேட வாகனங்கள் வியாழக்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.

தற்போது இலங்கை கடற்படையின் பொறுப்பில் உள்ள இந்த வாகனங்களின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்னிலையில் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles