27 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத மின்சார இணைப்பால் இத்தனை கோடி நிதி இழப்பா?

கடந்த 08 மாதங்களில் சட்டவிரோத மின்சாரம் இணைப்பு காரணமாக சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சிலர் மின்சார மானியை மாற்றுதல் மற்றும், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதன் ஊடாக குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இவ்வாறான மின்சார கொள்முதலால் சபைக்கு ஏழு கோடியே தொண்ணூற்று இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் மின்சார மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏழு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து அறுநூற்று நாற்பது ஒன்பது ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இருபத்தி ஆறு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து இருநூற்று ஏழு ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களிடமிருந்து முப்பத்தாறு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து ஐநூறு ரூபா அறவிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles