சந்தேகத்துக்குரிய விதத்தில் நாடாளுமன்றத்தை படம்பிடித்த இருவர் கைது!

0
144

சந்தேகத்திற்கு இடமான முறையில், நாடாளுமன்ற வளாகத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் படமெடுத்த இருவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு நுழையும் பாதை வழியாக உள்ள தியவன்னா ஓயாவுக்கு அருகில் நின்று நாடாளுமன்ற வளாகத்தை படமெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் நாடாளுமன்றத்தை படமெடுத்தமைக்கான நோக்கத்தை சந்தேகநபர்கள் இதுவரையில் வெளியிடாத நிலையில் தலங்கம காவல்துறையினர் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.