அம்பாறை மத்திய முகாம் பகுதியிலிருந்து, சில்ரன் பெரேரா எனும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சமாதானம் நல்லிணக்க அமைதி வேண்டி நடைபவனியை நேற்று காலை ஆரம்பித்தார்.
இலங்கையில் பல்லின பன்மைத்துவ சமூக நல்லிணக்க மேம்பாட்டை கருத்தில் கொண்டு, நாடளாவிய முக்கியமான நகரங்களின் ஊடாக தன்னுடைய சமாதான நடைப்பவணியை மேற்கொள்ள உள்ளார். அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு மட்டக்களப்பு காத்தான்குடி நகரை வந்தடைந்தார். காத்தான்குடி அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயிலின் தலைவர் கே.எல்.எம்.பரீத், செயலாளர் முஹம்மத் இர்பான் உட்பட பள்ளி வாயல் நிர்வாக உறுப்பினர்கள் இவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
கிழக்கு மாகாணம், வடக்கு மாகாண உட்பட கொழும்பு, கண்டி போன்ற நகரங்களுக்கு ஊடாக சென்று மீண்டும் அவருடைய சொந்த ஊரான அம்பாறை மத்திய முகாமை அடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில்ரன் பெரேராவின், சமாதான நடைபவணியை ஊக்குவிக்கும் வகையில் பௌத்த மத தேரர்களும் நடைபவனியில் இணைந்துள்ளனர்.