26 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை’எனும்
தொனிப்பொருளில் மரநடுகை வாரம் பிரகடனம்

இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.சமுர்த்தி திணைக்களத்தினால் ‘சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை’ எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்ட மர நடுகை வாரம் 17ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி மரம் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கிராமத்தில் இடம்பெற்றது.வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மட்டக்களப்பபு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்,சமுர்த்தி மாவட்ட தலைமையக முகாமையாளர் ஜே.எஸ்.மனோகிதராஜ்,காயங்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம்,வாகரை பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பலா, தேக்கு,பலா போன்ற மரக்கன்றுகளும் பனை விதைகளும் அதிதிகளால் நடப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles