சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

0
149

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தைப் பெறச் சென்ற பலரை வங்கி அதிகாரி ஒருவர் உட்பட சில முக்கிய அதிகாரிகள் அநாகரீகமாக நடத்துவது தொடர்பில்  சமூக ஊடகங்களில் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தனது குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக தனது கணக்கில் இருந்த 61,000 ரூபாயிலிருந்து  சிறிது  பணத்தைக்  கேட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் கொடுக்கவில்லை என்றும், தனது கஷ்டத்தை கூறியதையடுத்து, 5,000 ரூபா கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும்  குறித்த பெண்  சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.