Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது
.நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளைமறுதினம் (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கும் , அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சம்பந்தனின் பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.