ஆன்டிகுவாவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஷேய் ஹோப் ஒரு அழகான சதத்தை அடித்தார். ஆனால் அது போட்டியின் பின்னர் முக்கிய பேசு பொருள் ஆகவில்லை.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா, மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் கீரோன் பொல்லார்ட் மற்றும் களத்தின் நடுவர் ஜோ வில்சன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
போட்டியின் 22 ஆவது ஓவரில் குணதிலக, பொல்லார்ட்டின் ஒரு பந்து வீச்சினை எதிர்கொண்டு அதனை தனது கால்களுக்கு முன்னால் தடுத்து நிறுத்தினார்.
மறுபக்கத்தில் இருந்த பதும் நிசாங்க அதற்கு ஒரு ஓட்டத்தினை ஓட முயன்ற சந்திர்ப்பத்தில் தனுஷ்க குணதிலக்கவினால் வலியுத்தலால் மீண்டும் திருப்பி அனுப்பட்டார்.
அதையடுத்து குணதிலக, கிறிஸ் கோட்டுக்கு பின்னோக்கி திரும்ப முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக அந்த பந்து அவரின் கால்களில் சிக்கி பின்நோக்கி நகர்ந்தது.
இதனிடையே ரன்-அவுட்டை மேற்கொள்ள பந்தைப் பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்ட பொல்லார்ட்டுக்கு குணதிலக்கவின் இந்த நடவடிக்கை இடையூறாக அமைந்தமையினால் நடுவரிடம் முறையிட்டார்.
ஆன்-பீல்ட் நடுவர் அதை மூன்றாவது நடுவருக்கு மாற்றினார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் குணதிலக்க களத்தடுப்பு தடையை ஏற்படுத்தியமை கண்டறியப்பட்டு, அவர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந் நிலையில் மூன்றாவது நடுவரின் முடிவை மைக்கேல் வாகன், டாம் மூடி மற்றும் டேரன் சமி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் நடுவரின் தீர்ப்பை பாராட்டியுள்ளதுடன், குணதிலக்க நிச்சயமாக பீல்டரை களத்தடுப்பினை மேற்கொள்ளாது தடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் மாத்திரமன்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் இது தொடர்பில் விமர்சனங்களை தற்சமயம் முன்வைத்து வருகின்றனர்.