25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சர்வகட்சி அரசை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வி

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவசரகால சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டில் தற்போதைய சூழல் ஜனநாயக கொள்கைக்கு எதிரானதாக காணப்படுகிறது. இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரை அரசியல் கட்சிகளுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவில்லை. ஒரு கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய மாத்திரம் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிடின் பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாக அமையும். பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் ஏற்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதை அறிய முடிகிறது. நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் இடையிலான உறவு வெகுவாக சிதைவடைந்துள்ளது. ஒரு சில அரசியல்வாதிகளின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் 225 உறுப்பினர்களையும் முழுமையாக வெறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வு காணாவிடின் தீர்வு காணும் உரிமையினை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles