Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலை கலவை தொழில்நுட்பத்தில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதனால் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள கணேஷ் தெய்வநாயகம் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் இந்திய தேயிலையின் ஏற்றுமதி கட்டணம் 3.58 அமெரிக்க டொலர்களாகவும், கென்யாவின் ஏற்றுமதி கட்டணம் 2.60 அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், இலங்கை தேயிலையின் சராசரி கட்டணம் 5.10 ஆகவும் திகழ்வது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான முயற்சி, சர்வதேச தடைகளில் இருந்து வெளியேறுதல் மற்றும் நவீன தன்மையினை அறிமுகப்படுத்தல் போன்ற காரணிகளினால் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.