Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மழை காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், ‘117’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இவ்வருடம் 459,979 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.