முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கின் நான்காவது சந்தேகநபரான ‘சிங்கப்பூர் சரத்’ எனப்படும் சரத் குமார எதிரிசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டில் இன்று (04) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ‘சிங்கப்பூர் சரத்’ ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் மேர்வின் சில்வாவின் பாராளுமன்ற விவகார செயலாளராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.