பத்து வயது சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சனிக்கிழமை (05) அன்று புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
புத்தல காவல் பிரிவில் உள்ள ஊவா பெல்வத்த குமாரகம குடியிருப்பு வசித்துவரும் இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை செய்கிறார், தந்தை கூலித் தொழிலாளி அச்சிறுவனுக்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர்.
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சிறுவன், வௌ்ளிக்கிழமை (04) பாடசாலை முடிந்து வீடு திரும்பி விளையாடிக் கொண்டிருந்தது.
பின்னர், அந்த சிறுவன், தனது தந்தை கொடுத்த கடிதத்தை அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 33 வயதுடைய கூலித் தொழிலாளிக்கு வழங்க வீட்டிற்குச் சென்றது.
அறையில் இருந்த சந்தேக நபர், கடிதத்தை பெற்றுக்கொண்டு, அச்சிறுவனின் தந்தைக்கு தொலைபேசி செய்தியை அனுப்பும் வரை சிறுவனை வீட்டிலேயே வைத்துக்கொண்டார்.
அங்கு, அவர் சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்தார். தந்தை வீட்டுக்கு திரும்பியதும்,தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவ பரிசோதனைக்காக புத்தல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.