சிற்றுண்டி பாக்கெட்டில் குஷ் ; பெண் கைது!

0
26

சுமார் 5 கோடி 70 இலட்சம் ​ரூபாய் பெறுமதியுடைய குஷ் போதைப் பொருளுடன் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டு பெண்  ஒருவர் “கிரீன் செனல்” வழியாக வெளியேற முயன்ற போது சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட பெண் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

 குறித்த பெண் தாய்லாந்தின் பாங்காக்கில் “குஷ்” போதைப் பொருள் தொகையை வாங்கிக் கொண்டு இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து   இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அவர்  கொண்டு வந்த பைக்குள் இருந்த 25 “சிற்றுண்டி” பாக்கெட்டுகளில் இருந்து இந்த 5 கிலோ 700 கிராம் “குஷ்” போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.