சீதை அம்மன் ஆலய மண்டப திறப்பு விழா!

0
33

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டபம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட சீதை அம்மன் ஆலயத்தில் அன்னதான மண்டபத்தை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

சீதை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் குழுவின் தலைவர் வி. ராதா கிருஷ்ணன், திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரை வரவேற்றார்.

சீதை அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தின் திறப்பு விழாவில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.