சீனாவிடமிருந்து இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருள்!

0
129

சீனாவினால், இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதில் 7.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது.

குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச்செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் தொகையானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சீனாவினால் வழங்கப்படவுள்ளது.