சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு!

0
165

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு, இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்றது.
இதன்போது சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஸ்ரீ.சு.க. தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜாதிக நிதஹஸ் பெரமுன தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ.சென்ஹோங், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா மஹஜன கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க, ஆண்டு விழாக் குழுவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.டீ.என்.வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.