Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மாற்றுவதற்கு புதிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, எதிர்வரும் நாட்களில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பளார் குழு கலைக்கப்பட உள்ளது. ஆணையத்துக்கு புதிய தலைவர் மற்றும் பணிப்பளார்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு (SPC) புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ள நிலையில் மேலும் சில உயர் பதவிகளும் மாற்றப்பட உள்ளன.தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்தல், டெண்டர் நடைமுறை மீறல் மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர் பத்திரன அண்மையில் சுகாதார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.