வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண சம்பிரதாய பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது பொறுப்புக்களை புதிய பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்துள்ளார் .
இதன்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர் .