ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம், மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ளது.

இந்த வழக்கு, இன்று, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு, பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைய, உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.