செஞ்சோலைப் படுகொலையின் 16வது நினைவேந்தல்!

0
163

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது, 2006ம் ஆண்டு நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட, பாடசாலை மாணவர்கள் உட்பட 61 பேரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், விமானத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பொதுச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தினர்.