சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் மின்னஞ்சல்வந்ததால் பரபரப்புஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் சென்னைக்கு வரும் இலங்கை மும்பை பெங்களூர் சிலிகுரி டெல்லிகொல்கத்தா உள்ளிட்ட 8 ஏர் இந்தியாவிமானங்கள் மற்றும் கோவா புனே ஐதராபாத் ஆகிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம்11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு அலுவலர்கள் மோப்பநாய்களுடன் விமானங்களில் சோதனை நடத்த தயார் நிலையில் இருந்தனர்.
ஒவ்வொரு விமானமும் தரையிறங்கியதும் பயணிகள் வெளியேறிய பிறகு விமானத்துக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் எந்த விமானத்திலும் வெடிகுண்டு இல்லை. அந்த மெயில் வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கடந்த ஒரு வாரமாக இந்தியாமுழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு புரளி தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. சிலதினங்களுக்கு முன்பு கூட சென்னை விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சல் 3 விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.