சைல்ட் அக்சன் லங்கா நிறுவனத்தினால் கல்வி வள நிலையம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளுப்படிச் சேனை கிராம சேவையாளர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களான கரடியனாறு, கொடுவா மடு, பங்குடா வெளி, இளுப்படிச் சேனை, புலய வேலி, தளவாய், காயங்குடா, தம்பான வெளி ஆகிய 8 கிராம சேவைகள் பிரிவில் வறுமை கோட்டின் கீழ் பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி, போஷாக்கு சிறுவர் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமை மேம்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் 8 கிராம சேவையாளர் பிரிவு மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான கல்வி வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சைல்ட் அக்சன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் அப்ரா வக்கீல் தலைமை இடம் பெற்ற கல்வி வள நிலையம் திறப்பு விழா மற்றும் கலாசார நிகழ்வில் சைல்ட் அக்சன் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டில்ஷான் எதிரி சிங்க மற்றும் நிதி நன்கொடையாளர்கள் பெண் பால ரட்ணம் குடும்பத்தினர், சைல்ட் அக்சன் லங்கா நிறுவன ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்