ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கடமைகளில் ஈடுபடவுள்ள வாக்கு பெட்டிகள் விநியோகிக்கும் மற்றும் பாரமேற்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கும்,
பிரதி தலைமை தாங்கும் அலுவலகர்களுக்குமான விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்,
மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரி சுபியானின் ஒழுங்கு படுத்தலின் கீழ் செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள, வாக்கு பெட்டிகள் விநியோகிக்கும் மற்றும் பாரமேற்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள், பிரதி தலைமை தாங்கும்
அலுவலகர்களும், செயலமர்வில் பங்கேற்றனர்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.