ஜனாதிபதித் தேர்தலுக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்போது மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரையான காலப்பகுதியில் 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.