ஜனாதிபதி இன்று விஷேட கலந்துரையாடலில்

0
194

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 21 திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் இன்று வினவுவதற்கு அரசாங்கக் குழுவொன்று தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.