மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள, வாக்களிப்பு மையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்கினைப் பதிவு செய்த பின் எமது செய்திப்பிரிவிற்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு புனித ஜோசேப்வாஸ் வித்தியாளயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அக்கரைப்பற்று இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலய வாக்களிப்பு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், விவேகானந்தா மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் தமது வாக்கினை பதிவுசெய்தார்