26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி ரணில் வாக்களிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று காலை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அனைவரும் அமைதியாக செயற்பட்டு ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

இந்த நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலையை நிறைவு செய்து, தேர்தலை நடத்துவதற்கான பின்னணியை தான் உருவாக்கியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று நடைபெறும் தேர்தல் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தலைமைத்துவத்தை பரிசீலிப்பதற்கு இது சரியான தருணம் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, கடந்த இரண்டு வருடங்களில் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து தேர்தலை நடாத்த முடிந்தமை குறித்து தாம் பணிவுடன் பெருமை கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் இலங்கையில் ஒரு திருப்புமுனையாகவும், நாட்டை அழித்த பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் இருந்து விலகி நாட்டில் புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை கட்டியெழுப்புவதற்கான பெறுமதியான சந்தர்ப்பம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் அமைதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடாத்த முடிந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தேர்தலில் பங்குபற்றிய அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles