ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, மட்டக்களப்பு கூழாவடியில், தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில், அக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச குழுத் தலைவர் காந்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள், பிரதேச பொதுமக்கள் என பலரும், கூட்டத்தில் பங்கேற்றனர்.