ஜப்பான் வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி!

0
137

ஜப்பானின் இபராகி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் 6 வருடங்களாக அந்நாட்டில் தங்கியிருந்த நண்பர்கள் எனவும், இவர்களது மகிழுந்து மற்றுமொரு மகிழுந்துடன் மோதி பின்னர் மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாத்தறை மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய திருமணமாகாத இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.