26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜி-20 அமைப்பின் தலைமை இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பின் இந்த ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் அடுத்த வருடம் இந்தியா தலைமை ஏற்று நடhத்தவுள்ளது. இந்தப் பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி- 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில்இ இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி-20 அமைப்பிற்கு தலைமைப் பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles