Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என நம்புவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் கொட்டாபொலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பத்திரன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும் அரசாங்கமும் இணைந்து ஜூலை மாதம் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால் உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, இது மின் உற்பத்திக்கான ஒட்டுமொத்த செலவையும் குறைக்கும்.
எனவே எதிர்வரும் ஜுலை மாதம் மீள்திருத்தத்தின் போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும்.மின்சாரக் கட்டணக் குறைப்பு தொழில் துறைகளுக்கு குறிப்பாக தேயிலை தொழிலுக்கு நன்மை பயக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.